அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வாக்கும் சூஃபிகள்

https://www.facebook.com/noormaideena/videos/1558900347531367/

அப்துல் காதீர் ஜீலானியை சூஃபிகள் அல்லாஹ்வாக ஆக்கும் நிகழ்வுகளை நன்றாக கவனியுங்கள்! “எல்லாமே அல்லாஹ்” என்ற “அத்வைதமே” அனைத்து தரீக்காவினர்களின் தராக மந்திரம் என்பதற்கு இதுவும் மற்றொரு சான்று!

‘அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டிய நீ ஏன் தர்ஹாக்களுக்குச் செல்கின்றாய்? என்ற  கேள்விகளுக்கு அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி ‘தர்ஹாக்களுக்குச் செல்வதன் நோக்கம் ஜியாரத்’ என்று இனியும் இந்த சூஃபித்துவவாதிகள் ஏமாற்ற இயலாது!

ஆக மொத்தத்தில் இந்த சூஃபிகள் அல்லாஹ்வை விடுத்து ‘மனிதனை அல்லாஹ் வாக்கி அவனை வணங்க வைத்து வழிகெடுக்க வேண்டும்!’ இதுவே அந்த சூஃபிகளின் லட்சியம்!

மக்கள் கூட்டம் கூட்டமாக நரக படுகுழிக்கு செல்லனும்! அதை தான் இவர்கள் பக்தியின் பெயரால் மக்களை வழிகெடுக்கிறார்கள்!!

“முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி தான் அல்லாஹ்” என்று பறைசாற்றும் இந்த தரீக்காவினர் தான் தங்களை “சுன்னத் ஜமாஅத்தினர்” என்று அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றுகின்றனர்.

தமிழ் பேசும்முஸ்லிம்கள் இனியும் ஏமாறாமல் இருந்து

படைத்தவன் வேறு!

அவனது படைப்பினங்கள் வேறு

என்பதை அறிந்து

படைத்தவனான அல்லாஹ்வை

மட்டும் வணங்க வேண்டும்! ஏனையவைகள் நபிமார்கள், அவுலியாக்கள், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜூலானி உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அல்லாஹ்வின் அடிமைகளே என்பதையும் அறியவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed