அவ்லியாக்களுக்காக நேர்ச்சை செய்து பிராணிகளை அறுக்கலாமா?
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 11 : அவ்லியாக்களுக்காக நேர்ச்சைசெய்து, அவர்களுக்காக பிராணிகளை அறுத்து, அச்செயல்களின் மூலம் அவர்களிடம் நன்மையை எதிர்ப்பார்த்து துன்பங்களிலிருந்து நீங்கியிருப்பதற்கு பிரார்த்தப்பது பற்றிய இஸ்லாமீய தீர்ப்பென்ன?
பதில் : அங்கு அடக்கப்பட்டிருக்கும் நல்லடியார்களின் பெயரில் அறுத்துப் பலியிடுவது மிகப் பெரும் ஷிர்க்காகும். எவர் அப்படிச் செய்வாரோ அவர் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு உட்படுவார்.
‘எவர் அல்லாஹ் அல்லாத ஒன்றின் பெயரில் அறுத்துப் பலியிடுவாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.