அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா?
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 09 : நபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிக்கும் நோக்கில் பிரயாணம் மேற்கொள்ள முடியுமா? இப்படியாக தரிசிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில் : கப்றுகளைத் தரிசிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்ள முடியாது. அது நபிமார்களுடையதாக இருக்கலாம், அவ்லியாக்களுடையதாக இருக்கலாம். அவை வழிகெட்ட பித்அத்தாகும்.
‘மார்க்கத்தின் பெயரால் நன்மையை நாடி மூன்று இடங்களைத் தவிர பயணிக்க முடியாது, புனித மிக்க மஸ்ஜிதுல் ஹராம், எனது மஸ்ஜித் (மஸ்ஜிதுன் நபவி), மஸ்ஜிதுல் அக்ஸா’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துவார்களோ அது நிராகறிக்கப்படும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மண்ணறைகளை தரிசிப்பது நபிவழியாகும். அதை தரிசிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்வது தான் தடுக்கப்பட்டுள்ளது.
‘மண்ணறைகளை தரிசியுங்கள் நிச்சயமாக அது உங்களுக்கு மறுமை சிந்தனையை ஏற்படுத்தும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).